மாணவி வித்தியா படுகொலை வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணை செய்யப்படவுள்ளது.
குறித்த கொலை வழக்கு விசாரணை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வழக்கின் விசாரணைகளின், மேலதிக நடவடிக்கைக்காக சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது.
இந்நிலையில் ட்ரயல் அட் பார் தீர்பாயத்தில் விசாரணை நடத்த சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதேவேளை, இவ்வழக்கை கொழும்பில் நடத்தவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்புக்காக இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் கடந்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்போது சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றப்பகிர்வு பத்திரம் ஒரு வாரத்துக்குள் முன்வைக்கப்படும் என்று சட்டமா அதிபர் சார்பில் அரச தரப்பு சட்டத்தரணியால் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.