மொனராகலை, பிபிலை தொடங்கொல்ல பிரதேசத்தில் இன்று நடந்த வாகன விபத்தில் ஒரு பெண் உயிரிழந்ததுடன், மற்றுமொரு யுவதி படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் தனியார் பேருந்துடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பிபிலை பிரதேச செயலகத்தில் பணி புரிந்து வந்த தொடங்கொல்ல கிராமத்தை சேர்ந்த 35 வயதான டி.எம். தம்மிகா என்ற திருமணமாகாத பெண்ணே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த, உயிரிழந்த பெண்ணின் உறவினரான யுவதி மொனராகலை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள், பிபிலையில் இருந்து மொனராகலை நோக்கி சென்ற தனியார் பேருந்துடன் மோதியுள்ளது.
இதில் காயமடைந்த இரண்டு பெண்களையும் பிரதேசவாசிகள் பிபிலை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான பேருந்தின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிபிலை பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.