நேர்மையான வழிகளில் மக்களால் தமது உரிமைக்காக முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் தோல்வியடைவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி இரணைதீவு மக்களின் பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி 10ஆவது நாளாக முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் ஈடுபடும் மக்களைப் இன்று (வியாழக்கிழமை) பார்வையிட்ட பின்னர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கிளிநொச்சி இரணைமாதா கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் இரணைதீவிலுள்ள தமது 187 ஏக்கர் பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபடும் மக்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் போராட்ட களத்திலிருந்து கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மக்களின் காணிகளை விடுப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாக கேட்டறிந்தார்.
இதன் போதுமக்களின் போராட்டம் நியாயமானது என்றும் குறிப்பிட்டார். மக்களின் காணிவிடுவிப்பு தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் குறிப்பிட்டார்.