கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாத நாள். கூடுதல் செலவுகள் வந்து சேரும். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று செயல்படுவது நல்லது. வாகனப் பழுதுச் செலவுக ளால் கையிருப்புக் குறையலாம்.
அலுவலகத்தில் அதிக மரி யாதை கிடைக்கும் நாள். வளர்ச்சிப் பாதைக்கு வித்திட்ட சிலரின் சந்திப்பு கிட்டும். அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள்.
போட்டிகளுக்கு மத்தியில் முன் னேற்றம் கூடும் நாள். ஆரோக்கியம் சீராகும். பிரபல மானவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். பழைய கடன் பிரச்சினைகளைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள்.
சந்திக்கும் நண்பர்களால் சந் தோஷம் கூடும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சிகள் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும்.
இனிமையான நாள். மனதில் ஊக்கமும், உற்சாகமும் குடிகொள்ளும். பெற்றோர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டுவந்து சேர்ப்பர்.
கருத்து வேறுபாடுகள் அகலும் நாள். உடன்பிறப்புகள் வழியில் உள்ளம் மகிழும் சம்பவமொன்று நடை பெறலாம். வியாபாராம் தொழிலில் புதிய மாற்றங்கள் செய்யும் எண்ணம் உருவாகும்.
புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுக் களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.
கனிவான பேச்சுக்களால் காரி யங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டிய நாள். அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வர். குடும்பத்திற்கு தேவையான பொருட் களை வாங்க செலவிடுவீர்கள்.
பரபரப்பாகச் செயல்படும் நாள். பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. நிச்சயித்த காரியமொன்றில் திடீர் மாற்றங்களைச் சந்திக்க நேரிடலாம். குடும்பச்சுமை கூடும்.
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். லட்சியங்களை நிறை வேற்றுவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். அயல்நாட்டு யோகம் உண்டு.
கலகலப்பான நாள். காரிய வெற்றிக்கு கண்ணியமிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இடம் சம்மந்தமாக இருந்த இழுபறி நிலை மாறும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும்.
தன்னம்பிக்கையோடு பணி புரிந்து தடைகளை அகற்றிக் கொள்ள வேண்டிய நாள். வாங் கல்-கொடுக்கல்களில் ஏற்பட்ட குளறுபடிகள் மாறும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும்.