Loading...
சிங்கள, தமிழ், முஸ்லிம் என சகல இன மக்களின் பிரச்சினைகளை நியாயமான முறையில் தீர்க்க வேண்டும் என்பதை தமது அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்பி நல்லிணக்கத்தை வலுப்படுத்துவது அரசாங்கத்தின் முதன்மையான பணி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...
தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்தி உலகில் பலமிக்க நாடாக இலங்கை தாய் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் எனவும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.
Loading...