கலிபோர்னியாவில் 1990 ஆம் ஆண்டு இறந்துபோன இளம்பெண்ணின் வழக்கில் 27 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த பெண்ணின் உடலை பொலிசார் அடையாளம் கண்டுபிடித்துள்ளனர்.
1990 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள Pacific Coast என்ற நெடுஞ்சாலையில் இரண்டு கார்கள் மோதிக்கொண்டதில் 26 வயதுடைய இளம்பெண் உயிரிழந்தார்.
ஆனால், இறந்துபோன பெண் யார் என்பது குறித்து பொலிசாரால் அடையாளம் காணமுடியவில்லை. பிரேத பரிசோதனையின் போது அவரின் அங்க அடையாளங்கள் மற்றும் கைரேகைகள் எடுக்கப்பட்டது.
அதனை அடிப்படையாக வைத்து பொலிசார் கடந்த 27 ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மிகவும் மர்மமாகவே இருந்துள்ளது. இருந்தபோதிலும் பொலிசார் இதனை கண்டுபிடிப்பதை நிறுத்தவில்லை.
இந்த ஆண்டு எப்.பி.ஐ உடன் இணைந்து அடையாளம் காணப்படாத நபர்களின் கைரேகைகளை மிகவும் நெருக்கமாக ஆராயும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டனர்.
இதில், மே 4 ம் திகதி, 1990 ஆம் ஆண்டில் இறந்துபோன பெண்ணின் பெயர் மற்றும் இருப்பிடம் குறித்து பொலிசாருக்கு தெரியவந்தது. Andrea Kuiper என்ற இளம்பெண்ணே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அப்பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து காவல் நிலையம் சென்ற Kuiper குடும்பத்தினர், எங்கள் மகளுக்கு என்ன ஆனது, அவள் எங்கு இருக்கிறான் என்று இதுவரை தெரியாமல் ஒரு குழப்பத்தில் இருந்தோம்.
தற்போது அதற்கு விடை கிடைத்துவிட்டது, எங்கள் மகள் இறப்பதற்கு முன்னால் போதை மருந்து பழக்கம் மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார் என Kuiper தெரிவித்துள்ளார்.