சாஸ்திரங்களின் படி, வீட்டில் விளக்கேற்றிய பின் தலை வாரக் கூடாது, கூந்தலை விரித்தப்படி, இருக்கக் கூடாது என்று கூறுவார்கள் அது ஏன் தெரியுமா?
விளக்கேற்றிய பின் தலை வாரக்கூடாது ஏன்?
மாலை நேரம் வழிபாட்டிற்கு உரியது என்பதால், விளக்கேற்றும் அந்த நேரங்களில் திருமகளான மகாலட்சுமி நம் இல்லத்தில் உறைந்திருப்பாள் என்பது ஒரு ஐதீகம்.
அந்த நேரத்தில் பெண்கள் கூந்தலை விரித்தபடி நிற்பது அல்லது தலை வாருவது இது போன்ற செயலில் ஈடுபடக் கூடாது.
எனவே வீட்டில் விளக்கு வைப்பதற்கு, முன்பே பெண்கள் தலைவாரி, பூ முடித்து, நெற்றியில் திலகமிட்டுக் கொள்வது சிறப்பைத் தரும் என்று சான்றோர்கள் கூறுகின்றனர்.
அதோடு திருமகள் தங்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் தினமும் மாலையில் வீட்டின் பூஜை அறையிலும், வாசலிலும் நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
அவ்வாறு தீபம் ஏற்றும் போது, வீட்டின் பின்புற கதவு இருந்தால் அதை மூடி விட வேண்டும். இவ்வாறு செய்தால், செல்வத்திற்கு அதிபதியான மகாலெட்சுமி நம் வீட்டில் நிலைத்திருப்பாள்.