தனது சகோரனை வெறுப்பதாக கையில் எழுதிவிட்டு சிறுமியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் இங்கிலாந்தின் West Yorkshire பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.
13 வயது சிறுமியொருவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சிறுமி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் , அவரது கையில் “நான் எனது அண்ணனை வெறுக்கிறேன்” என எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் , சம்பவம் தொடர்பில் 18 வயதுடைய சிறுமியின் அண்ணனிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தனக்கும் தனது தங்கைக்கும் இடையில் தகராறு ஒன்று ஏற்பட்டதாவும் , அது சிறிய கருத்து வேறுபாடு மாத்தரமே என அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட சிறுமி கற்றலில் திறமைமிக்கவர் எனவும் அவர் அனைத்து மாணவிகளுடனும் நட்பாக பழகக்கூடியவர் எனவும் அவரது ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர் இரவு உணவிற்கு பின்னர் தனது அறைக்கு சென்றுள்ளதை தொடர்ந்து இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
எவ்வாறாயினும் , பிள்ளைகளின் கல்வி தொடர்பில் சிறப்பு ஆர்வம் காட்டும் பெற்றோர் அவர்களது நடவடிக்கை தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்தாமை இவ்வாறான அசம்பாவிதங்களுக்கு காரணமாகியுள்ளதாக நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.