மாகாணசபைகளில் ஆட்சி மாற்றங்கள் கிடையாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்…
எந்தவொரு சவாலையும் எதிர்நோக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயார்.நல்லாட்சி அரசாங்கத்தை ஒரு ஆண்டில் கவிழ்ப்பதாக கூட்டு எதிர்க்கட்சி பிரச்சாரம் செய்திருந்தது.
அந்த பிரச்சாரத்தை மெய்ப்பிக்க முடியாத கூட்டு எதிர்க்கட்சி தற்போது மாகாணசபைகளில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதாக அறிவித்துள்ளது.
மாகாணசபைகளில் ஆட்சி மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது.சில மாகாணசபைகளின் பதவிக் காலம் இந்த ஆண்டில் நிறைவடைய உள்ளன.
சில மாகாணசபைகளுக்கான தேர்தல்களை இந்த ஆண்டில் நாம் நடாத்த உத்தேசித்துள்ளோம்.
வட மாகாண முதலமைச்சரைத் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாண முதலமைச்சர்களும் ஜனாதிபதியுடன் இருக்கின்றார்கள்.
இதனால் மாகாணசபை தேர்தல் நடத்தப்படும் வரையில் மாகாணசபைகளில் ஆட்சி மாற்றம் செய்யப்படாது என துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.