தன்னை துஷ்பிரயோகத்திற்க உட்படுத்தினார் என இளைஞர் ஒருவர் மீது பொய்யான முறைப்பாட்டினை மேற்கொண்ட பெண்ணொருவர் பெலிஹத்த காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான குறித்த பெண்ணின் கள்ளக்காதலரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் தாக்குதல் சம்பவமொன்றில் இருந்து அவரை காப்பாற்றுவதற்காக இவ்வாறு பொய்யான முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பின்னர ்தெரியவந்துள்ளது.
இவ்வாறு பொய்யான முறைப்பாடு செய்யப்பட்டுள்ள இளைஞர் மீதே அந்த பெண்ணின் கள்ளக்காதலர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் , குறித்த முறைப்பாடு தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் பெலிஹத்த காவல்நிலைய பொறுப்பதிகாரி ஜயந்த சமரகோனினால் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு விசாரணையில் குறித்த முறைப்பாடு பொய்யானது என தெரியவந்துள்ளது.
அதனடிப்படையில் சந்தேகநபரான குறித்த பெண் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதன் போது , தங்காலை நீதவான் மஹீ விஜேவீரவின் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் குறித்த பெண் விடுவிக்கப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும் , பொய்யான முறைப்பாட்டை மேற்கொண்டு காவற்துறையினரை தவறாக வழிநடத்தியது மற்றும் நபரொருவரை அவமானப்படுத்தும் வகையில் பொய்யான முறைப்பாட்டை மேற்கொண்டது போன்ற குற்றங்களின் கீழ் சந்தேகநபரான பெண்ணுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.