அனைத்து வேலைகளும் அரைகுறையாக நிற்கும் நாள். அதிகப்பொறுப்புகளால் அலைச்சல் கூடும். அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. வீண் விரயத்தைச் சமாளிக்க நேரிடும்.
விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணையும் நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். நண்பர்களின் சந்திப்பால் நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். திருமண முயற்சி வெற்றி தரும்.
எடுத்த காரியங்கள் வெற்றியாகும் நாள். வீட்டுப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். வியாபார விருத்திக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிட்டும்.
கனவுகள் நனவாகும் நாள். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் வந்து சேரும். கண்டும், காணாமலும் சென்ற உறவினர்கள் வலிய வந்து உறவாடுவார்கள். கட்டிடப் பணி தொடரும்.
முன்னேற்றத்திற்கு உதவிய சிலரை சந்தித்து மகிழ்வீர்கள். பணியாளர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். தாய்வழித் தனலாபம் உண்டு. வாகனமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள முன்வரும் நாள். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். பூமி வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி வெற்றிபெறும். குடும்பத்தில் ஏற்பட்ட சச்சரவுகள் அகலும்.
வைராக்கியத்தோடு செயல்பட்டு வாக்குறுதியைக் காப்பாற்றும் நாள். உங்கள் பொறுமைக்கு இன்று பெருமை கிடைக்கும். வருமானம் இருமடங்காகும். கொடுக்கல்ரூவாங்கல்கள் ஒழுங்காகும்.
சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும் நாள். விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். வருங்கால நலன் கருதி வைப்பு நிதியை வங்கிகளில் சேர்க்கும் எண்ணம் உருவாகும்.
விரயங்கள் கூடும் நாள். வீடு மாற்றம், இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பொருளாதார நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். தொழில் பங்குதாரர்களிடம் கவனம் தேவை.
விவாதங்களில் வெற்றி கிட்டும் நாள். நண்பர்களின் சந்திப்பால் பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் அகலும். தந்தை வழி அனுகூலம் உண்டு.
தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். வீட்டைச் சீரமைப்பதில் ஆர்வம் ஏற்படும். மற்றவர்களுக்காக வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரலாம். உத்தியோக முன்னேற்றம் உண்டு.
புதிய பாதை புலப்படும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். குடும்பத்தினர்களிடம் கலகலப்பாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும்.