ஒருவரது ராசியைக் கொண்டு, அவரைப் பற்றிய பல விஷயங்களைக் கணிக்க முடியும். குறிப்பாக குணநலன்கள், எதிர்காலம், எந்த தொழில் சிறப்பாக இருக்கும் போன்ற பலவற்றை அறிந்து கொள்ள முடியும். அதுமட்டுமின்றி, அதே ராசியைக் கொண்டு, எந்த விஷயத்தில் அதிகம் பொய் சொல்வார்கள் எனவும் தெரிந்து கொள்ளலாம்.
இக்கட்டுரையில், எந்த ராசிக்காரர்கள் எந்த விஷயத்தில் அதிகம் பொய் சொல்வார்கள் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைக் கொஞ்சம் படித்து பாருங்கள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் தாங்கள் எதற்கும் அச்சம் கொள்ளமாட்டோம் என பொய் சொல்வார்கள். ஆனால் உண்மையில் இந்த ராசிக்காரர்கள் சிலந்தியைக் கண்டாலே அஞ்சுவார்கள். மேலும் இவர்கள் காதல் அல்லது திருமணம் செய்து கொள்ள மிகவும் அச்சம் கொள்வார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள், எதைப் பற்றியும் அதிகம் கவலைக் கொள்ளமாட்டேன் என்று பொய் சொல்வார்கள். ஆனால் இவர் தன் கடந்த வாழ்வில் நடந்த மோசமான விஷயத்தை மறக்காமல், மனதில் மறைத்து வைத்து வெளியே கவலை இல்லாதது போல் நடிப்பார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள், உடல்நல குறைவு அல்லது சோர்வு குறித்து அடிக்கடி பொய் சொல்வார்கள். யாரேனும் ஒருவர் இந்த ராசிக்காரர்களைப் பார்த்து ஏன் இவ்வளவு மோசமாக உள்ளீர்கள் என்று கேட்டால், போதிய தூக்கம் இல்லை அல்லது அழற்சியின் காரணமாக என சாக்கு போக்கு கூறுவார்கள்.
கடகம்
கடக ராசிக்கார்கள், தங்களது உறவு குறித்து பொய் கூறுவார்கள். அதுவும் மற்றவர்கள் முன் தனக்கு அமைந்த வாழ்க்கைத் துணை மிகவும் பொருத்தமானவர் போன்று சித்தரித்து காட்டுவார்கள். ஏனெனில் மற்றவர்கள் தன் துணையை வெறுக்கக்கூடாது என்பதற்காக.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறோம் என்பதில் பொய் சொல்வார்கள். வீட்டு வாடகை செலுத்த பணம் இல்லாமல் போராடும் போது, தன் நண்பர்களிடம் இருந்து கடன் வாங்க வெட்கப்படமாட்டார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் உதவியே தேவைப்பட்டாலும், தேவையில்லை என்று பொய் சொல்வார்கள். தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ள முடியும் என்று தன்னைத் தானே பெருமை பாராட்டுவார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள், மன்னித்தது போல் பாசாங்கு காட்டுவார்கள் மற்றும் சண்டைகளை வெறுப்பார்கள். இதனால் கடந்த காலத்தில் யாரேனும் தனக்கு தீங்கு விளைவித்திருந்தால், ரகசியமாக அவர்களை பழி வாங்குவார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் மது மற்றும் எத்தனை பேருக்கு முத்தம் கொடுத்தோம் என்ற விஷயத்தில் பொய் கூறுவார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு தனது வாழ்க்கை சுவாரஸ்யமாக செல்வதைப் போலவே வெளிக்காட்ட முயற்சி செய்வார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சிங்கிளாக இருப்பதையே விரும்புவதாக பொய் கூறுவார்கள். அதற்காக அவர்கள் காதலில் விழ அல்லது திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள் என்றில்லை. தனிமையில் இருப்பது போர் அடித்தாலும், மற்றவர்கள் முன்பு சந்தோஷமாக இருப்பது போல காட்டிக் கொள்வார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் அனைத்தும் பெற்றிருப்பது போல பொய் சொல்வார்கள். அதேப் போல் மன வலிமைப் படைத்தவர்கள் போன்றும், அமைதியானவர் போன்றும் வெளிக்காட்டிக் கொள்வார்கள். ஆனால் உண்மையில், அவர்கள் எப்போதும் குழப்பமான மனநிலையில் தான் இருப்பார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள், சிறு விஷயத்திற்கு தான் பொய் கூறுவார்கள். அதுவும் தனக்கு எந்த விஷயத்தை எப்படி செய்வதென்று தெரியாதது போல் நடிப்பார்கள். மேலும் தன்னை எப்போதும் பிஸியாக வெளிக்காட்டிக் கொண்டு, மற்றவர்கள் கூறும் வேலையை செய்யத் தவிர்ப்பார்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் அதிகமாக பொய் சொல்லமாட்டார்கள். அப்படியே பொய் சொன்னாலும், அது மோதல்களைத் தவிர்ப்பதற்காக இருக்குமே தவிர, வேறு எதற்காகவும் பொய் சொல்லமாட்டார்கள். இதனாலேயே நண்பர்கள் பலரும் இவர்களை வெறுக்கமாட்டார்கள்.