Loading...
ஐக்கிய நாடுகளின் சர்வதேச வெசாக் பண்டிகை தினத்தின் இறுதிநாள் நிகழ்வில் பங்கேற்பதற்காக ஐந்து நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி இலங்கையை வந்தடைந்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் வெசாக் தினத்தின் ஆரம்ப நிகழ்வுகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இறுதிநாள் நிகழ்வில் நேபாள ஜனாதிபதி பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
நாளைய இறுதிநாள் நிகழ்வில், பல்வேறு உலக நாடுகள் சார்பில் பிரதிநிதிகள் பலர் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Loading...
ஐக்கிய நாடுகள் வெசாக் தினத்தை இலங்கையில் நடத்துவதற்கு கடந்த 2001ஆம் ஆண்டு அனுமதி கோரப்பட்டிருந்த போதிலும், இம்முறையே முதன்முறையாக நடத்துவதற்கு அனுமதி கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...