சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா நடராஜனை இன்னும் 75 நாட்களில் வெளியில் கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்காக செயற்பாடுகளில் சட்டவல்லுநர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ள சசிகலா சிறையில் இருந்து வெளியே வர பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிற நிலையில் இவ்வாறு கூறப்படுகின்றது.
அத்தோடு, கட்சியில் இருந்து சசிகலாவை தனிப்பட்ட ஒருவரால் நீக்க முடியாது எனவும் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக அவரை பொதுக்குழுவே தீர்மானித்தது எனவும் துணை சபாநாயகரும், அ.தி.மு.க. அம்மா அணியின் மூத்த தலைவருமான தம்பிதுரை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அளவுக்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்த வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கு 4 ஆண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.