சர்வதேச வெசாக் விழாவில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த வியாழக்கிழமை இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.
மோடி இலங்கைக்கு வருவதற்கு முன்னர் இந்திய விமான படைக்கு சொந்தமான எம்.ஐ.17 ரக ஹெலிகாப்டர்கள் இரண்டு இந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. கொழும்பு மற்றும் டிக்கோயா வைத்தியசாலைகளை திறக்கும் நிகழ்விற்காகவே அனுப்பி வைக்கப்பட்டது.
மோடியின் விஜயம் குறித்து கருத்து வெளியிட்டிருந்த ஜனாதிபதி அவர் வெசாக் நிகழ்வுகளுக்கு மாத்திரமே வருகைத்தருகின்றார் எனவும்,வேறு ஒன்றிற்கும் அல்ல எனவும், பல்வேறு நபர்கள் தவறான பிரச்சாரங்களை முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்புடனான கலந்துரையாடலுக்கு மோடி இணங்கியதாக அந்தக் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.
இவ்வாறான சூழ்நிலையில் சீன நீர்மூழ்கி கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தரவிருந்ததாகவும், அதற்கு இலங்கை அரசாங்கம் மறுப்பு தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
எனினும், இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது என்ன?
திருகோணமலை துறைமுகத்தையும் சீன துறைமுகத்தின் எண்ணெய் தொட்டிகளையும் இந்தியாவுக்கு வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்திய மாநாடு ஒன்றில் கலந்து கொண்ட முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்குவதாக முதன் முதலாக தகவல் வெளியிட்டிருந்தார்.
இதேவேளை, இலங்கை கடற்படையினருக்கு அதிவேக இரண்டு படகுகள் கோவா கப்பல் பட்டறையில் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.
இந்த சூழலில் மோடி இலங்கைக்கு வருகை தருவதற்கு 24 மணித்தியாலங்களுக்கு முன்னர் வடமாகாண சபையினால் யோசனை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
பலாலியை சர்வதேச விமான நிலையமாக மாற்றுமாறும், அதனை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையினை இந்தியாவுக்கு வழங்குமாறும் யோசனை ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டது.
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தியை இந்தியாவுக்கு வழங்க வேண்டும் எனவும் வடமாகாண சபையின் குறித்த யோசனையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த யோசனையில் இந்தியாவின் அழுத்தம் நுட்பமாக பிரியோகிக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகிறது.
இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தெவொல்லின் செயற்பாடு இதனை மேலும் உறுதி செய்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது. அவருக்கு சீனாவுக்கு ஆதரவாக இலங்கை ஆட்சியை மாற்றுவதற்கு செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டவராகும்.
சில காலங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இந்திய தூதர நாயகம், இந்திய அமைதிப்படை போர் குற்றம் செய்ததாக வெளியிடும் கருத்துக்களை நிறுத்திக் கொள்ளுமாறு வடக்கு ஊடகங்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
யாழ்ப்பாணத்தில் தூதரக அலுவலகம் ஒன்றை நிறுவிய இந்திய அரசாங்கம், மாகம்புர துறைமுகத்தில் சீன செயற்பாட்டை கண்கானிப்பதற்காக ஹம்பாந்தோட்டையில் தூதரக அலுவலம் ஒன்றை நிறுவியது. எனினும் அது ரோ புலனாய்வு சேவைக்கு தொடர்புடைய அலுவலகம் என சந்தேகிக்கப்பட்டது.
இவ்வாறான சூழலுக்கு மத்தியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கறுப்பு பூனை படையின் பாதுகாப்பிற்கு மத்தியில் இலங்கைக்கு வருகைத்தந்திருந்தார். அவருடன் கிட்டத்தட்ட 60 பேருடன் வருகைத்தந்தனர்.
முன்னாள் இந்திய பிரதமர் ரஜீவ்காந்தி இலங்கைக்கு வருகை தந்த போது இராணுவ அணி வகுப்பில் கலந்து கொண்ட சந்தர்ப்பத்தில், விஜேமுனி விஜித் ரோஹன என்ற கடற்படை வீரர் தனது துப்பாக்கியில் அவரை தாக்கியமையே இதற்கு காரணமாகும்.
அந்த வரலாற்றினை இந்திய புலனாய்வு சேவை இன்னமும் மறக்கவில்லை. அத்துடன் இலங்கை விமான படையினரிடம் எம்.ஐ.17 ஹெலிகாப்டர்கள் உள்ள போதிலும், மோடி இந்தியாவில் இருந்து எம்.ஐ.17 ஹெலிகொப்டர்கள் இரண்டு தனது பாதுகாப்பு கருதியே கொண்டு வந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.
கட்டுநாயக்கவில் இருந்து வாரணாசி வரை நேரடி விமான சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மோடி குறிப்பிட்டிருந்தார்.
எனினும் இந்தியாவின் செயற்பாடு இலங்கை மக்கள் மத்தியில் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. அது மோடியின் ஆட்சி காலத்தில் மாத்திரம் இன்றின் எதிர்காலத்தில் அழுத்தமாக அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் நோயாளிகள் அம்புலன்ஸ் வண்டி இல்லாமையால் நோயாளிகளை சைக்கிள்களில் கொண்டு செல்லும் நிலை காணப்படுகிறது. இந்நிலையில் இந்திய அரசாங்கம் இலங்கைக்கு அம்புலன்ஸ் சேவை ஒன்றை வழங்கியது.
அத்துடன் இந்தியாவில் வறுமையான நிலையில் உள்ள கிராமங்களி்ல் வைத்திய வசதிகள் இல்லை. எனினும் பல மில்லியன் செலவிட்டு டிக்கோயாவில் வைத்தியசாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு இந்திய அரசாங்கம் செயற்பட்டது.
மோடி இந்த நாட்டிற்கு வருகைத்தருவதற்கு முன்னர் தமிழ் நாட்டில் இருந்து 100 ஆசிரியர்களை மலையகத்திற்கு கொண்டு வரும் முயற்சியில் கல்வி இராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் முயற்சித்துள்ளார்.
எப்படியிருப்பினும் இந்தியா இன்று இந்த நாட்டின் சீன செயற்பாடு குறித்து கண்கானிக்கின்றது. வன்னி செயற்பாட்டின் போது சீன ரேடார் அமைப்பு கொண்டு வரப்பட்டு மிரிகமவில் பொருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் சீன – இந்திய அதிகாரிகள் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டனர். எனினும் அந்த எதிர்ப்பினை கருத்திற் கொள்ளாமல் அது பொருத்தப்பட்டது.
வன்னி செயற்பாட்டின் போது சீனாவில் இருந்தே பாரிய ஆயுதங்கள் கிடைத்துள்ளது. இந்தியா இலங்கைக்கு வழங்கியிருந்த பாரத் ரேடார் கட்டமைப்பு உட்பட விடுதலை புலிகள் கொழும்பிற்கு வரும் போது செயலிழந்து காணப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலைமைக்கு மத்தியில் இந்திய புலனாய்வு சேவை நாட்டின் அனைத்து செயற்பாடுகள் குறித்தும் அவதானத்தில் இருந்தமை உறுதியாகியுள்ளது.
ரோ பிரிவினர் இந்த நாட்டு அரசியல்வாதிகளுடன் செயற்பட்டுள்ளனர். பல வருடங்களுக்கு முன்னர் முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன வெளிப்படுத்திய முறையினை குறித்த ஊடகம் நினைவுப்படுத்தியுள்ளது.