Loading...
நாவற்குழியில் புதிய பௌத்த விகாரை ஒன்றுக்காக தாதுகோபத்தை அமைப்பதற்கு சிறிலங்கா இராணுவத்தினர் அடிக்கல் நாட்டியுள்ளனர்.
தென்மராட்சி நாவற்குழியில் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் தெற்கில் இருந்து கொண்டு வந்து இறக்கப்பட்ட சிங்களமக்கள் அரசகாணிகளில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
Loading...
இவர்களின் வழிபாட்டுக்காக பௌத்த ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், அங்கு விகாரைக்கான தாதுகோபத்தை அமைப்பதற்கு கடந்தவாரம் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
ஒரு கோடி ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள இந்த விகாரைக்கான அடிக்கல் நாட்டுவிழாவில் சிறிலங்கா இராணுவத்தின் 52-3 பிரிகேட் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் திசநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
Loading...