கடந்த சனிக்கிழமை உலக நாடுகளின் கணினி வலையமைப்புக்களில் நடத்தப்பட்ட வைரஸ் தாக்குதலால் சுமார் 150 நாடுகளில் 2 இலட்சத்துக்கும் அதிகமான கணினிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள வைரஸ் தாக்கம் காரணமாக இணையத்தள பயன்பாட்டின் போது அவதானமாக இருக்குமாறு கணினி அவசர நடவடிக்கை பிரிவு ஆலோசனை வழங்கியுள்ளது.
ஈ – மெய்ல்களை திறந்து பார்வையிடும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் கணினி பயன்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கணினிகளிலுள்ள ஆவணங்களை வேறொரு (பெண்டிரைவ் உள்ளிட்ட) கருவிகளில் சேமித்து வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாறான நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம், வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என கணினி அவசர நடவடிக்கைப் பிரிவு ஆலோசனை வழங்கியுள்ளது.