Loading...
யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கினை கொழும்புக்கு மாற்றக் கூடாது எனக் கோரி அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் புங்குடுதீவு மகாவித்தியாலயத்திற்கு முன்பாக இன்று புங்குடுதீவு மக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதேவேளை மாணவியின் கொலை வழக்கு கொழும்பில் மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் முன்பாக “ட்ரயல் அட்பார்” (நீதிபதிகள் அடங்கிய விசாரணை மன்று) முறைமையில் முன்னெடுக்கப்பட உள்ளதாக வெளியான தகவலை அடுத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...
Loading...