80 வயது முதியவரின் கண்காணிப்பின் கீழ் வளர்ந்து வந்த மனநலம் குன்றிய இரு பெண் பிள்ளைகள் கம்பஹா சியம்பலபே சிறுவர் காப்பகத்தில் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பெண் குழந்தைகளை கண்காணித்து வந்த முதியவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாகவே, முதியவரின் இரண்டு பேரப் பிள்ளைகளும் சிறுவர் காப்பகத்தில் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மனநலம் குன்றிய இரண்டு குழந்தைகளினதும் பெற்றோர்கள், தொழில் வாய்ப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளனர்.
இந்த நிலையிலேயே 80 வயது தாத்தாவின் கண்காணிப்பில் இரண்டு அழகிய குழந்தைகளையும் அவர்கள் கைவிட்டு சென்றுள்ளனர்.
எனவே, இரண்டு பெண் பிள்ளைகளினதும் அவல நிலை தொடர்பில் அயலவர்கள் மீகஹவத்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
பின்னர், குறித்த குழந்தைகளை பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள் அழைத்துச் சென்று,கம்பஹா சியம்பலபே சிறுவர் காப்பகத்தில் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், சிறுமிகளை பாதுகாப்பான பாதுகாவலரிடம் ஒப்படைப்பதற்கு மஹர நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்ப்பார்த்திருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.