முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் கலைச்செல்வனின் மனைவி பவானி கடந்த இறுதிக்கட்டப்போரின்போது மனநிலை பாதிக்கப்பட்டிருந்த வேளை திடிரென எதிர்பாராமல் தற்கொலை செய்துள்ளார்.
கடந்த 2008 ஆம்ஆண்டு இறுதிக்கட்ட போரின் போது புதுக்குடியிருப்பு தேவிபுரம் ஆ.பகுதியில் இருந்த வேளையில் திடிரென ஸ்ரீலங்க இராணுவத்தின் தாக்குதல் காரணமாக அவரது தாயாரும் இரண்டு சகோதரர்களும் செல்வீச்சில் இறந்ததை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இந் நிலையில் இவர் கணவனுடன் முள்ளிவாய்க்கால் வரை சென்று இறுதிப்போர் முடிந்த நிலையில் இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் சென்று ஆனந்தகுமாரசாமி முகாமில் வசித்தவேளையில் இவருக்கு உடல்உள ரீதியாக பாதிப்பு ஏற்பட்டது. இந் நிலையில் இரவு வேளைகளில் அடிக்கடி வீட்டை விட்டு வெளியில் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார்.
இதனால் கிராமசேவையாளரின் அனுமதியுடனும் இராணுவத்தின் அனுமதியுடனும் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் இவருக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் பின்னர் இவருடைய வருத்தம் ஒரளவு குணமடைந்த நிலையில் இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தார்.
காலப்போக்கில் இவரது சகேதரர்களின் அரவணைப்பு குறைவடைந்த நிலையில் மீண்டும் யோசனைகள் அதிகரித்து மனஉழைச்சலுக்கு உள்ளாகியிருந்தார்.
இந்த நிலையில் மம்மில் பிள்ளையார் வருடாந்த பொங்கலுக்கு கடந்த (10.05.2017) சென்று வீட்டிற்கு வந்து அடுத்த நாள் காலை கடமைகள் அனைத்தையும் முடித்து விட்டு கணவன் வேலைக்கு சென்ற பின்னர் வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து தனது பிள்ளையின் தொட்டில் கயிற்றில் தூங்கி தற்கொலை செய்துள்ளார்.
இறந்தவரின் கணவர் மிக அன்பாக பார்த்து வந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.