உடலுக்கும் சருமத்திற்கும் அருமருந்து தேங்காய் எண்ணெயாகும். சருமத்தில் தேங்காய் எண்ணெய்யினை உபயோகிப்பதால் சருமம் பொலிவடையும்.
சரும வறட்சி போன்ற பிரச்சனைகளிலிருந்து தப்பிப்பதற்கு தேங்காய் எண்ணெயினை பயன்படுத்தலாம்.
தேங்காய் எண்ணெய் பூஞ்சை மற்றும் நோய் தொற்றினை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் உடையது.
மேலும் தேங்காய் எண்ணெயினை உணவில் சேர்த்து கொள்வதால் பல்வேறு பலன்கள் கிடைக்கிறது.
பயன்கள்
உடல் எடை குறையும்.
டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு சிறப்பான பலனை தரும்.
நோய் தொற்றினால் ஏற்படும் நோய்கள் மற்றும் பற்சிதைவிலிருந்து பாதுகாக்கிறது.
நினைவாற்றல், செரிமான மண்டலம் ஆகியவற்றின் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது.
ஹார்மோன்களை செயல்பாட்டிற்கு உதவுகிறது.
நோய் தொற்றினை தடுக்க உதவுகிறது.
சரும பாதுகாப்பிற்கு
தேங்காய் எண்ணெய் உடலுக்கு மட்டுமல்லாது சருமத்திற்கும் நல்ல பலனை தரும்.
சூடுபடுத்தப்பட்ட தேங்காய் எண்ணெயுடன் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் சருமத்திற்கு ஏற்ற மற்றுமொரு எண்ணெயினை 5 ஸ்பூன் சேர்த்து கலந்து முக கழுவுவதற்காக உபயோகிக்கலாம்.
உதட்டில் பூச பயன்படுத்தும் ஏதேனும் ஒரு தைலத்துடன் சிறிது தேங்காய் எண்ணெயினை கலந்து உதட்டில் தடவி கொள்வதால் உதடு வறட்சியினை தடுக்கும்.
முகத்தில் போட உபயோகிக்கும் ஏதேனும் ஒரு க்ரீமுடன் சிறிது தேங்காய் எண்ணெயுடன் கலந்து இரவில் தூங்கும் முன்னர் முகத்தில் தேய்த்தால் முகப்பரு போன்ற பிரச்சனைகள் வருவதை தவிர்க்கலாம்.
வெயிலினால் உடலில் ஏற்படும் கொப்புளங்கள் மீது தேங்காய் எண்ணெய் தேய்ப்பதால் அவை விரைவில் குணமடையும். வெளியில் செல்லும் போது சருமத்தில் சிறிது எண்ணெய் தேய்ப்பதால் கருமையடைவது தடுக்கப்படும்.
மேக்கப் போட்டபின் அதனை களைப்பதற்கு இந்த எண்ணெயினை பயன்படுத்தலாம்.
கொசுக்கள் கடிக்காமல் இருப்பதற்கு சிறிது எண்ணெயினை சருமத்தில் பூசி கொள்ளலாம்.
தேங்காய் எண்ணெயுடன் சிறிது பனங்கற்கண்டினை சேர்த்து வாரத்தில் 3 -4 முறை தேய்த்தால் சருமம் மென்மையடையும்.