Loading...
இந்தியா, தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய 4 நாடுகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 249 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது. முதலில் ஆடிய இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 358 ரன்குவித்தது. தொடக்க விக்கெட்டுக்கு தீப்தி சர்மா-பூனம் ராவுத் ஜோடி 320 ரன்கள் குவித்தது உலக சாதனையாகும்.
Loading...
தீப்தி சர்மா 160 பந்துகளில் 188 ரன்கள் குவித்தார். இதில் 27 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும்.
பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு ஆட்டத்தில் அதிக ரன் குவித்த வீராங்கனைகளில் தீப்தி சர்மா 2-வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய வீராங்கனை பெலின்டா கிளார்க் 229 ரன் குவித்து முதல் இடத்தில் உள்ளார்.
Loading...