தமிழ்நாட்டில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ள கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உபகாரமாதாபுரத்தைச் சேர்ந்தவர் ஜான்பால் (37) இவர் மனைவி பொன் இசக்கி (28).
இவர்களுக்கு பிரசாந்த் (7) மற்றும் செல்வ ரோஜா (6) என இரு மகள்கள் உள்ளனர்.
சில மாதங்களாக இசக்கியின் நடத்தையில் ஜான்பாலுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனால கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வெளியில் சென்று விட்டு நேற்றிரவு ஒரு மணிக்கு ஜான்பால் வீட்டுக்கு வந்துள்ளார்.
வீட்டின் கதவை அவர் தட்ட, வெகுநேரம் கழித்தே இசக்கி கதவை திறந்துள்ளார். இவ்வளவு நேரம் வீட்டின் உள்ளே என்ன செய்து கொண்டிருந்தாய் என ஆத்திரமடைந்த ஜான்பால் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் துடித்த இசக்கி கீழே சரிந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து ஜான்பால் நேராக காவல் நிலையம் சென்று சரணடைந்துள்ளார்.
இசக்கியின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிய பொலிசார் இது குறித்து ஜான்பாலிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.