உலகளவில் ஸ்மார்ட் போன் யூஸ் செய்கிறவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களில் இருக்கும் இந்த சுவாரசிய விடயங்கள் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
பேட்டரி சேமிப்பு
ஸ்மார்ட் போன் ஸ்கிரீன் சேவரை கருப்பு அல்லது dark நிறத்தில் வைத்தால் தானியாங்கி பிக்சல் அணைந்து விடும்.
இதனால் போன் சார்ஜ் அதிக நேரம் நிற்கும்.
மெசேஜை ஒலியால் கேட்பது
ஒரு மெசேஜை ஆண்ட்ராய்டில் நாம் படிப்பதோடு மட்டுமல்லாமல் காதால் கேட்கவும் கூட முடியும்.
இதற்கு Settings -> Accessibilityல் சென்று பின்னர் Text-to-Speech பட்டனை ஆன் செய்ய வேண்டும்.
ரிமோட் கண்ட்ரோல்
Settings -> Security -> Device administratorsல் சென்று Remotely locate lock and erase ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
இப்படி செய்யும் பட்சத்தில் நமது ஸ்மார்ட் போன் தொலைந்து போனால் கூட நம் டேட்டா அழியாமல் போனை பிளாக் செய்யலாம்
Guest Mode
நம் செல்போனை தெரிந்தவர்கள் யாரிடமாவது கொடுக்க நேர்ந்தால், நம் personal டேட்டாக்களை அவர்கள் பார்க்ககூடாது என நினைத்தால் Guest Mode ஆப்ஷனை பயன்படுத்தலாம்.
Screen magnifier
கண் பார்வை பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த ஆப்ஷன் வரப்பிரசாதமாகும். Settings -> Accessibility -> Magnificationல் சென்றால் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் நாம் டிஸ்ப்ளேவை zoom செய்து கொள்ளலாம்
தலையை வைத்து போனை கண்ட்ரோல் செய்வது
EVA Facial Mouse என்ற ஆப்பை இன்ஸ்டால் செய்வதன் மூலம் ஸ்மார்போன் மீது கை வைக்காமல் தலையை அசைப்பதின் மூலம் இயக்கலாம்