உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பார்கள். அதே போல அதுவும் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுபோன்று ஆகிவிடும்.
எவ்வாறாகினும் உப்பினை அதிகமாக உள்ளெடுப்பதால் தாகமும் அதிகமாகும் என்று பொதுவான எடுகோள் அனைவரிடமும் உள்ளது.
ஆனால் இந்த எடுகோள் தவறு என்று ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.
அதாவது விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி வழங்கும்போது அவர்களுக்கு சாதாரண அளவிலும் அதிகமான அளவு உப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது அவர்களுக்கு தாகம் எடுக்கும் அளவு குறைவாக இருந்ததாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
உப்பு வழங்கப்பட்டு அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு இவ்வாறு தாகம் எடுக்கும் தன்மை குறைந்து காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அமெரிக்கா மற்றும் ஜேர்மனி விஞ்ஞானிகள் சேர்ந்த மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் உப்பை அதிகமாக உள்ளெடுப்பதால் உடல் பருமன், நீரிழிவு நோய் மற்றும் இருதய நோய்களை கட்டுப்படுத்த முடியும் என கண்டறிந்துள்ளனர்.