Loading...
வித்தியா கொலை வழக்கின் விசாரணைகளை யாழ் மேல் நீதிமன்றில் நடாத்த கோரியும்,
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கொல்லப்பட்டமைக்கு நீதி கோரியும்
மேற்குறித்த இரு விடயங்களுக்கும் அரசு 30 நாட்களுக்குள் உரிய பதிலை வழங்க வேண்டும் என தெரிவித்து
இன்று காலை 11.30 மணியளவில் பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.
“ஷேயாவுக்கு ஒரு நீதி வித்தியாவிற்கு ஒரு நீதியா” , ” தமிழ் அரசியல் தலைமைகளின் மௌனம் ஏன்”, “தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பானது”, “முடங்கிக்கிடந்தது போதும் மனிதா விழித்திடு” ,”தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்குஒப்பானது” ,”வேறறுப்போம் வன்முறையை வீறு கொள்வோம் மனித நேயம் மான்புறவே” போன்ற கோசங்களையும் முன்வைத்திருந்தனர்.
Loading...
Loading...