மூன்றாம் உலக யுத்தம் ஏற்படும், அதனால் உலகம் அழிவுப் பாதையில் செல்லும் என்பதே இப்போது ஒட்டு மொத்த உலகையும் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ள செய்தி.
இந்த நிலையில் உலகப்போர் நடக்குமா? அல்லது நடக்காதா என்ற சந்தேகத்திற்கும் இடையில், இந்த உலகப்போர் விளையாட்டை அமெரிக்கா 2013ஆம் ஆண்டே ஆரம்பித்து விட்டதாக கூறப்படுகின்றது.
வட கொரியாவின் சர்வதேசத்திற்கு அடங்காத செயற்பாடுகளினால், அமெரிக்கா மற்றும் வட கொரியாவிற்கு இடையே ஏற்படும் யுத்தத்தினால் அது மூன்றாம் உலகப்போராக வெடிக்கும் என்பதே அடுத்தடுத்து இப்போது வெளிவரும் செய்திகள்.
என்றாலும் கூட வட கொரியாவிற்கும், அமெரிக்காவிற்கும் ஆரம்பம் முதலாகவே ஓர் பனிப்போர் இருந்து வந்தது என்பது அனைவரும் அறிந்த விடயமே.
ஆனாலும் 2017ஆம் ஆண்டு ஆரம்பித்ததன் பின்னரே இந்த பனிப்போர் உலகப்போராக மாற்றமடையும் என்ற செய்திகள் வெளிவர ஆரம்பித்தன. அதற்கு முன்னர் உலகப் போர் பற்றிய செய்திகள் அதிகமாக இல்லை.
எனினும் இப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், 2013 ஆம் ஆண்டே மூன்றாம் உலகப்போர் பற்றி கருத்து தெரிவித்திருந்தமை தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது “இப்போது நடைபெறும் பயங்கரமான தலைமைத்துவம் எம்மை அறியாமலேயே மூன்றாம் உலகப்போருக்கு அழைத்துக் கொண்டு செல்லக்கூடிய சிறிய வாய்ப்பு உள்ளது” என தனது உத்தியோகப் பூர்வ டுவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.
இந்த இடத்தில் அப்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமாவை சுட்டிக்காட்டி சிரியா யுத்தத்தை உதாரணப்படுத்தி இந்தத் தகவலை அவர் வெளிப்படுத்தினார் என்பதே அனைவருக்கும் வெளிப்படையாக சென்றடைந்த விடயம்.
ஆனாலும் உலகப்போர் பதற்றம் ஆரம்பமானது ட்ரம்ப் பதவி ஏற்றதன் பின்னரே. என்பது இந்த இடத்தில் கூட்டிக்காட்டப்படவேண்டிய விடயமாகும்.
2013 காலப்பகுதிகளில் இப்போது ஏற்பட்டுள்ள உலகப்போர் பதற்றம் ஏற்பட வில்லை. என்றாலும் உலகப்போர் ஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ளது என அப்போதே ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் ட்ரம்ப் சொல்ல வந்தது எதனை? உலகப்போர் ஏற்படும் வாய்ப்பு உருவாகின்றது என்பதனையே என்பது வெளிப்படை. ஆனாலும் தற்போது ஏற்பட்ட உலகப்போர் பீதியை அவர் 2013ஆம் ஆண்டே சொன்னது எவ்வாறு?
பதவியில் அவர் இல்லாத போது அமெரிக்காவின் செயற்பாடுகள் பற்றி அவர் அறிந்தது எவ்வாறு? கணித்தது எவ்வாறு? தான் பதவி ஏற்றதன் பின்னர் உலகப்போர் அபாயம் ஏற்படும் என்பதையே அவர் மறைமுகமாக கூறினாரா? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இதன் மூலம், மூன்றாம் உலகப்போர் ஏற்கனவே அமெரிக்காவினால் திட்டமிடப்பட்டு வரப்பட்டுள்ளதாகவும், ஆயினும் வெளிப்படையில் அதற்கு வட கொரியா தற்போது காரணமாக்கப்பட்டு வருகின்றது எனவும் கூறப்படுகின்றது.