சுற்றுலாவாசிகளின் சொர்க்கபுரியாக விளங்குவது பிலிப்பைன்ஸ். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த நாட்டு பெண்களுடன் காதல் வயப்பட்டு அங்கேயே தங்கி விடுவது வழக்கம். மேலும் சிலர் பிலிப்பைன்ஸ் பெண்களிடம் தங்கள் வாழ்க்கையை தொலைத்து விடுவது உண்டு.
அப்படி ஒருவர்தான் ஜெர்மனியை சேர்ந்த கிறிஸ்டோப்(49). இவர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு வந்தார். வந்தவர் இங்குள்ள ஒரு பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்தார். அந்த பெண் இவரிடம் இருந்த பணம், உடமைகளை எடுத்து கொண்டதோடு பாஸ்போர்ட் விசாவையும் திருடி சென்று விட்டார்.
இதனால் சொந்த நாட்டிற்கு செல்ல முடியாமல் அவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் குப்பை அள்ளியும், பிச்சை எடுத்தும் வாழ்க்கையை ஓட்டி வருகிறார். சக சுற்றுலா பயணி ஒருவர் இது குறித்து தகவல் அறிந்து பேஸ்புக்கில் தகவல் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்து கிறிஸ்டோபரை காப்பாற்றுவார்கள் எனவும் நம்புகிறார்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இதுபோன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் தெருவில் சுற்றி திரிவதும் சர்வ சாதாரணமாக நடப்பதாக கூறப்படுகிறது.