இந்தியாவின் நம்பர் ஒன் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து.
2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனீ ரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையான ஐதராபாத்தைச் சேர்ந்த அவர் பாராட்டு, பரிசு மழையில் நனைந்தார்.
பி.வி.சிந்துவுக்கு ஆந்திர மாநில அரசு ஏற்கனவே ரூ.3 கோடி பரிசு தொகையும், தலைநகர் அமராவதியல் 1000 சதுர அடி வீடும் வழங்கி இருந்தது. இதற்கிடையே 22 வயதான பி.வி.சிந்துவுக்கு துணை கலெக்டர் பதவியும் வழங்க ஆந்திர மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு தேவையான சட்ட திருத்த மசோதா ஜி.எஸ். டி.க்காக கூட்டப்பட்ட சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறை வேற்றப்பட்டது.
இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் கொடுத்த பிறகு பி.வி.சிந்து துணை கலெகடராக நியமிக்கப்படுவார். விரைவில் அவர் துணை கலெக்டராக நியமிக்கப்படுவார். தற்போது அவர் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசனில் துணை மேலாளராக பணியாற்ற வருகிறார்.