கால் பாதங்களில் அழுத்தம் ஏற்படும்போது வெள்ளை நிறத்தில் தோல் தடித்து, சிறிய மேடு போல ஒரு தோற்றம் உருவாகும்.
பின்னர் மேற்புறத் தோல் உலர்ந்து, கொப்புளம் ஏற்பட்டு, கொஞ்சம் முற்றினால் சீழ் கோத்து, உடைந்து ரத்தப்பெருக்கும் ஏற்படும்.
இந்த பிரச்சனையால் நடக்கும்போதும் நிற்கும்போதும் தாங்க முடியாத வலி ஏற்படும். உள்ளங்கால்களில் மட்டும்தான் ஆணி ஏற்படும் என்றில்லை, சில நேரங்களில் தேய்ந்த காலணிகளைப் பயன்படுத்துவது, கால்களைச் சுத்தமாகப் பராமரிக்காதது போன்றவற்றின் காரணமாகக் கால் விரல்களின் பக்கவாட்டிலும் ஆணிகள் ஏற்படலாம்.
கால் ஆணியை தவிர்க்க மென்மையான சோப்பைப் பயன்படுத்திப் பாதத்தைக் கழுவலாம்.
பின்னர் கால்களைச் சுத்தம் செய்த பின்னர் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை போடலாம். மேலும் டிகெராட்டினிசேஷன் க்ரீம் (Dekeratinization creams) போன்ற மாய்ஸ்சரைசர் க்ரீம்களைக் கால்களில் தடவலாம்.
இந்த க்ரீம்களில் உள்ள கெராட்டின், இறந்த செல்களை அகற்ற உதவும். இந்த பிரச்சனைக்கு சுய சிகிச்சை செய்துகொள்வது தீங்கு விளைவிக்கும்.
குறிப்பாக, சர்க்கரை நோயாளியாக இருந்தால், கால்களை அகற்றவேண்டிய அளவுக்குப் பிரச்னை பெரிதாகலாம். எனவே, மருத்துவரை ஆலோசிப்பதுதான் சரியான வழி.
கால் ஆணி வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
கால்களைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். பாதங்களைச் சோப்புப் போட்டுக் கழுவி, சுத்தமான துணியால் நன்கு துடைக்க வேண்டும்.
பாதத்துக்குப் பொருத்தமான சரியான அளவிலான காலணிகளை அணிய வேண்டும்.
அழுத்தமான ஷூக்களையோ, பெரிய அளவிலான (லூசான) ஷூக்களையோ அணியக் கூடாது.
கால் ஆணி பாதிப்புக்கு உள்ளானவர்கள், மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர்களுடைய கால்களுக்குப் பொருத்தமான காலணிகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
சர்க்கரை நோயாளிகள் ஆண்டுதோறும் கால்களைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
மருந்துகள்
கால் ஆணி ஏற்பட்ட உடனேயே பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரவும். இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டுவிட்டு காலையில் எடுத்துவிடலாம்.
இதுபோல் ஒரு வாரம் செய்து வந்தால் கால் ஆணிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
மேலும், மல்லிகைச் செடியின் இலையை இடித்து அதன் சாறை எடுத்து பாதத்தில் பத்து போடுங்கள். இதனால் பாதத்தில் கால் ஆணி மேலும் பரவாமலும், இருந்த இடம் தெரியாமலும் போகும்.
மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதாணி ஒரு கைப்பிடி அளவு எடுத்து விழுதாய் அரைத்து, கால் ஆணிகள் மீது தொடர்ந்து 21 நாட்கள் வரை பூசிவர, கால் ஆணிகள் அனைத்தும் மறையும்.
அம்மான் பச்சரிசி செடியை சிறுசு சிறுசா உடைச்சு அதில வர்ற பாலை பயன்படுத்தலாம். ஒரு தடவை தடவினதும் குணம் கிடைக்காது. தொடர்ந்து ரெண்டு வாரமாவது செய்ய வேண்டும். முதலில் வலி குறையும், பிறகு போகப் போக ஆணியும் மறைந்துவிடும்.