Loading...
வெள்ளவத்தை அனர்த்தத்திற்கு கொழும்பு மாநகர சபையும், நகர அபிவிருத்தி அதிகார சபையுமே பொறுப்பேற்க வேண்டும் என தேசிய சகவாழ்வு மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
குறித்த அனர்த்த பகுதியை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Loading...
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “மக்கள் செறிந்து வாழும் வெள்ளவத்தை பகுதியில் இடம்பெற்ற மேற்படி அனர்த்தமானது கவலையளிக்கிறது.
உரிய அனுமதியின்றி மேற்படி கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இக்கட்டட நிர்மாணப் பணிகளில் ஊழல்கள் இடம்பெற்றிருக்கலாம். எனவே இது குறித்து விரிவாக ஆராயப்பட வேண்டும்” எனவும் அமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
Loading...