மகிந்த ராஜபக்சவின் ஜனாதிபதி பதவியை இல்லாமல் ஆக்கிய ஒரே நபர் எஸ்.எம்.சந்திரசேன என வடமத்திய மாகாண முதலமைச்சர் பேஷல ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
வடமத்திய மாகாணத்தின் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி எஸ்.எம். சந்திரசேனவின் பொய்களுக்கு செவி கொடுப்பதன் மூலம் கடந்த காலத்தில் வடமத்திய மாகாணத்தில் ஆரம்பமாகிய எதிர்ப்புகளை மீண்டும் உருவாக்கி பாதிப்புகளை அனுபவிக்க நேரிடும்.
வடமத்திய மாகாணத்தின் மீது எவருக்கும் கை வைக்க முடியாது என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் அனைத்து மாகாண சபைகளின் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அப்படி நடத்த வேண்டுமாயின் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்ற பேச்சும் உருவாகியுள்ளது.
அப்படியான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் மாகாண சபைகளின் பதவிக் காலத்தில் சில மாற்றங்கள் ஏற்படக் கூடும் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.