நல்லிணக்க வேலைத்திட்டத்தை வெற்றியாக்க கலைகள் மூலம் பெற்றுக்கொடுக்கக் கூடிய பங்களிப்பு மிகப் பெரியது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களின் கலைப் பொழுது போக்கை முன்னேற்றுவதன் மூலம் அறிவிலும் மதிப்பிலும் நிறைந்த எதிர்கால சந்ததியை உருவாக்க முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதிக்கும் நிபுணத்துவ கலைஞர்களுக்கும் இடையில் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
கலை, கலாசாரம் மற்றும் திரைப்படத்துறையின் எதிர்காலத்திற்காக முன்வைக்கப்படும் நிபுணத்துவ யோசனைகளை செயற்படுத்த தொடர் வேலைத்திட்டம் அவசியம்.
ஊடகத்துறை, கலாசாரம் மற்றும் கல்வியமைச்சின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினால் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.