மட்டக்களப்பு—காத்தான்குடி காவற்துறை பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி முத்துமாரியம்மன் ஆலயத்தின் மண்டபம் இடிந்து விழுந்ததில் 18 பேர் படுகாயமடைந்துள்ளதாக காவற்துறை தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு முன்னாள் அமைந்து ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலின் மண்டப கட்டிடப்பணிகள் நிறைவடைந்து அதற்காக பிளேட் கொங்க்ரீட் இடும் பணிகளின்போதே கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது.
கட்டிடப்பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஆறுபோர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைககு மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை மாவட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
தொடர்ந்து காயமடைந்தவர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தேடுதல் பணிகள் தீவிரமாக இடம்பெறுகின்றன.
காத்தான்குடி காவற்துறை விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.