அலோபியா ஐரேட்டா என்ற முடி உதிர்வு பிரச்சனை யாருக்கு வேண்டுமானலும் ஏற்படலாம். இது முடக்கு வாதம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, மற்றும் டைப் 1 நீரழிவு நோய் ஆகியவற்றால் ஏற்படுகிறது.
மேலும் இந்த பிரச்சனை ஒருவரின் குடும்பத்தில் உள்ளவரை பாதித்து இருந்தால், அது அந்த குடும்பத்தில் உள்ள மற்றவர்களை, அவர்களின் குழந்தை பருவத்தில் இருந்தே தொடர்ந்து, அவர்கள் வளர வளர முடி உதிர்வு பிரச்சனையும் அதிகரிக்கும்.
முடி உதிர்வு பிரச்சனையால் உடலில் மாற்றம் ஏற்படுமா?
முடி உதிர்தல் பிரச்சனை ஏற்பட்டால், அது நீங்கள் ஆரோக்கியமாக இல்லை என்று அர்த்தம் அல்ல. இதனால் உடல் மற்றும் மனம் ரீதியாக எந்த விதமான மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
வட்ட வடிவத்தில் முடி உதிர்ந்தால் என்ன அர்த்தம்?
வட்ட வடிவத்தில் முடி உதிர்ந்தால், அது அலோபியா ஐரேட்டா பிரச்சனை என்று அர்த்தம். இது வட்ட வடிவத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் முடி உதிர்வை ஏற்படுத்தும்.
மேலும் இதனால் உடலின் ஒரு சில இடங்களிலும் இந்த முடி உதிர்வு ஏற்படக்கூடும். உதாரணமாக தாடி, புருவம், தோல்பட்டை அல்லது கால்கள் போன்ற இடங்களில் முடி உதிர்வு உண்டாகலாம்.
அலோபியா ஐரேட்டா பிரச்சனையின் அறிகுறிகள் என்ன?
- அனைத்து வகையான முடி உதிர்வும் அலோபியா ஐரேட்டாவாக இருக்காது. முதலில் முடியின் வேர்பகுதியில் வட்ட வடிவத்தில் முடி உதிர்வு ஏற்பட்டுள்ளதா என்று நன்றாக கவனிக்க வேண்டும்.
- தலை முடிகள் உதிர்ந்ததும், சொட்டையாக உள்ள இடம் மிகவும் மிருதுவாக மாறிவிடும். அந்த இடத்தில் மீண்டும் முடி வளர்ச்சி ஏற்படாததை போல் இருக்கும்.
- ஒருவருக்கு முடி மிகவும் குறைவாக இருந்தால், அது அலோபியா ஐரேட்டாவாவின் அறிகுறியாக கூட இருக்கலாம். ஆனால் ஒரு சிறிய பகுதியில் மிகவும் குறைவான முடிகளே காணப்படும். ஆனால் இந்த பிரச்சனை மெதுவாக அதிகரிக்கும்.
- அலோபியா ஐரேட்டாவால் பாதிக்கப்பட்டிருந்தால், முடியின் வேர்பகுதிகளில் எரிச்சல் மற்றும் அரிப்பு உண்டாகும்.
தீர்வு
அலோபியா ஐரேட்டாவால் ஏற்பட்ட முடி உதிர்வு பாதிப்பிற்கு, பூசணியின் விதை எண்ணெய், மற்றும் பெப்பர் மிண்ட் எசன்சியல் எண்ணெய் ஆகியவை சிறந்த தீர்வாக இருக்கும்.