யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு யாழ்.மேல் நீதிமன்றில், மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் முன்னிலையில் நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலசிங்கம் சசி மகேந்திரன் தலைமையில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
“ட்ரயல் அட்பார்” முறைமையில் குறித்த விசாரணைகள் மிகவிரைவில் நடைபெறவுள்ளதாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழுவை பிரதம நீதியரசர் இன்று நியமித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணைகள் கொழும்பில் நடைபெறும் என செய்திகள் வெளிவந்த போதும், யாழில் நடைபெற வேண்டும் என்று அரசில் ரீதியாகவும், வித்தியாவின் உறவினர்கள் சார்பாகவும், பொதுமக்கள் சார்பாகவும் பல அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வந்தன.
இதன்படி குறித்த வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.