Loading...
சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த பெண் மருத்துவர் ஒருவரின் சடலத்தை நுவரெலியா பொலிசார் மீட்டுள்ளனர.
குறித்த பெண் மருத்துவர், இன்று (23) வைவத்தியசாலைக்கு சமூகம் தராததையடுத்து, அவருடன் பணிபுரியும் சக மருத்துவர்கள் அவர் தங்கியிருந்த மருத்துவர் விடுதியை பரீட்சித்தபோது, அவர் சடலமாக கிடப்பதை அவதானித்துள்ளனர்.
Loading...
31 வயதான கிரிபத்கொட பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மருத்துவர், தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
அவர், போதிய அளவிலும் பார்க்க மிகையான அளவில், மயக்கம் தரக்கூடிய மருந்தை ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
Loading...