Loading...
சியோமின் முதல் ஆஃப்லைன் விற்பனை மையம் மே 11-ந்தேதி பெங்களூருவில் திறக்கப்பட்டது. எம்.ஐ. ஹோம் என அழைக்கப்படும் விற்பனை மையத்தில் வெறும் 12 மணி நேரத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மே 20-ந்தேதி விற்பனையில் வெறும் 12 மணி நேரத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான விற்பனை செய்துள்ளதாக சியோமி தெரிவித்துள்ளது. இந்திய ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆஃப்லைன் வரலாற்றில் முதல் முறையாக இவ்வாறான மைல்கல் அரங்கேறியுள்ளது. மேலும் எம்.ஐ. ஹோம் ஸ்டோர் துவக்க விழாவில் 10,000 வாடிக்கையாளர்கள் வந்திருந்தனர் என்றும் சியோமி தெரிவித்துள்ளது.
பெங்களூரு விற்பனை மையத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை தொடர்ந்து அந்நிறுவனம் எம்.ஐ. ஹோம் ஸ்டோர்களை சென்னை, ஹைதராபாத், புது டெல்லி மற்றும் மும்பை உள்ளிட்ட இடங்களிலும் துவங்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இத்துடன் 2019 ஆம் ஆண்டிற்குள் நாடு முழுக்க சுமார் 100 எம்.ஐ. ஹோம் ஸ்டோர்களை துவங்க சியோமி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சியோமியின் எம்.ஐ. ஹோம் ஸ்டோரில் ரெட்மி மற்றும் எம்.ஐ. போன்கள், ஹெட்போன், ல்மார்ட் சாதனங்களான ஏர் பியூரிஃபையர்கள், பிட்னஸ் பேண்ட், விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்கள், பவர் பேங்க் மற்றும் செல்ஃபி ஸ்டிக் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகின்றது.
Loading...