Loading...
சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘சத்யா’. இப்படத்தை ‘சைத்தான்’ படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ண மூர்த்தி இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாதாம்பாள் பிலிம் பேக்டரி நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.
இப்படத்தில் சிபிராஜ் முத்தக்காட்சி ஒன்றில் நடிக்கமாட்டேன் என்று மறுத்துவிட்டாராம். படத்தில் லிப் லாக் முத்தக்காட்சி ஒன்று தேவையானதாக இருந்ததாம். சிபிராஜிடம் அந்த காட்சியில் நடிப்பது பற்றி கூறியதும் என்னால் முடியாது என்று கூறிவிட்டாராம்.
Loading...
இயக்குனரும் அவரிடம் அந்த காட்சியின் முக்கியத்துவத்தை விளக்கியும், அதில் நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டாராம். அதற்கு சிபிராஜ் கூறிய காரணம், என்னுடைய மகன் அந்த காட்சியை திரையரங்கில் பார்த்தால் நன்றாக இருக்காது என்பதுதானாம்.
இப்படம் வருகிற ஜுன் மாத இறுதியில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...