தந்தையின் சடலத்தின் இறுதிச் சடங்கினை ஆயத்தம் செய்வதற்காக செலவு செய்த பணத்தை தனது தாயிடம் கோரிய மகள் தொடர்பில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
அனுராதபுரம் – கிரிபாவ பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த தனது தந்தையின் இறுதிச் சடங்குகளை ஆயத்தம் செய்வதற்காக செலவு செய்த 75 ஆயிரம் ரூபா பணத்தை தருமாறு மகள் தாயிடம் கோரியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
காலமான நபர் காலி பெந்தர பிரதேசத்தை சேர்ந்தவர் அவருடன், அவரின் மகள் கிரிபாவ – வராவெவ பிரதேசத்தில் வசித்து வருவதாக தெரியவந்துள்ளது.
குறித்த நபர் நோய்வாய்ப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின்னர் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் ஒன்றரை மாதத்திற்கு பின்னர் குறித்த நபர் தனது மகளின் வீட்டில் வைத்து உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனது கணவர் இறந்ததை அறிந்த மனைவி தனது இல்லத்திற்கு சடலத்தை எடுத்துச் செல்ல மகளின் வீட்டுக்கு சென்றுள்ள நிலையில் மகள் சடலத்தை கொடுக்க மறுத்துள்ளார்.
பின்னர் கடந்த 22ஆம் திகதி குறித்த தாயும் அவரின் உறவினர்களும் மீண்டும் வந்து சடலத்தை தருமாறு கோரிய போது, தந்தையில் இறுதி சடங்கினை ஆயத்தம் செய்வதற்காக செலவு செய்த 75 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்தால் சடலத்தை தருவதாக மகள் கூறியுள்ளார்.
குறித்த சம்பவத்தை சமரசப்படுத்த பொலிஸார் தலையிட்டுள்ள நிலையில், காலமான நபரின் மனைவியிடம் சடலத்தை ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.