Loading...
தஞ்சாவூர் மாவட்டம் திருநீலக்குடியில் உள்ளது நீலகண்டேஸ்வரர் கோவில். இத்தல இறைவனை மனோக்யாநாதர் என்றும் அழைப்பார்கள். இத்தல மூலவருக்கு எண்ணெயால் அபிஷேகம் செய்யும்போது, பாத்திரம் பாத்திரமாக நிறைய எண்ணெயை லிங்கத்தின் மீது ஊற்றி அபிஷேகம் செய்வார்கள்.
Loading...
எவ்வளவு எண்ணெய் ஊற்றி அபிஷேகம் செய்தாலும், அத்தனையும் சிவலிங்கத்திற்கு உள்ளேயே உறிஞ்சப்பட்டு விடுவது அதிசயமாக உள்ளது. இதில் ஆச்சரியம் என்னவெனில் அபிஷேகம் செய்த அடுத்த நாள் லிங்கத்தின் திருமேனியைப் பார்த்தால், கிட்டதட்ட ஒரு வருடமாக எண்ணெயே தடவாதது போல் உலர்ந்து காய்ந்து காணப்படும்.
Loading...