கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, நல்லாட்சி வழங்கியுள்ளீர்கள் என நடிகர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடது சாரி முன்னணி அரசு பதவியேற்று நாளையுடன் ஓராண்டு நிறைவடைய உள்ளது. இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் முதல்வர் விஜயனுக்கு இ-மெயில் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், கடந்த ஓராண்டாக நல்லாட்சி வழங்கியுள்ளீர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
”ஓராண்டுகள் நல்லாட்சி வழங்கியுள்ளீர்கள். இதை கேரள மக்களுடன் நான் மகிழ்ச்சியை பங்கெடுத்துக் கொள்கிறேன். மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் முன் உதாரணமாக அண்டை மாநிலங்களுடன் நல்ல ஒத்துழைப்பை அளிக்கும் விதமாக நடந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்” என தனது வாழ்த்து செய்தியில் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்று புதிய அரசுகள் பொறுப்பேற்றன. இதில், கேரளா முதல்வருக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.