தேவையான பொருட்கள் :
முளைக்கீரை – ஒரு கைப்பிடி அளவு,
அரிசி – 250 கிராம்,
பாசிப்பருப்பு – 100 கிராம்,
மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்,
இஞ்சி – சிறிய துண்டு
வறுத்த முந்திரி – 10,
கறிவேப்பிலை – சிறிதளவு,
நெய் – தேவைக்கு
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
* கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மிளகு, சீரகத்தை கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
* அரிசியையும், பாசிப்பருப்பையும் லேசாக சூடுவரும் வரை வறுத்து கொள்ளவும்.
* வறுத்த அரிசி – பருப்புடன் ஒரு பங்குக்கு நான்கு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து, ஐந்து விசில் வந்ததும் இறக்கி ஆறியதும் நன்றாக மசித்து கொள்ளவும்.
* வாணலியில் நெய் விட்டு சூடானதும் இஞ்சியை போட்டு வதக்கிய பின்னர் நறுக்கிய கீரை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் மிளகு – சீரகப்பொடி சேர்த்து வதக்கவும்.
* கீரை நன்றாக வெந்ததும் வேக வைத்த சாதத்துடன் தேவையான உப்பு, வறுத்த முந்திரி சேர்த்துக் கிளறி இறக்கி பரிமாறவும்..
* சூப்பரான கீரைப் பொங்கல் தயார்.
குறிப்பு: புளிப்புத்தன்மை இல்லாத எந்த கீரையிலும் பொங்கல் தயாரிக்கலாம்.