கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார வேலைகளுக்காக இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களைப் பாவித்தமைக்கான கட்டணத்தைப் பெற்றுத்தருமாறு கொழும்பு வர்த்தக மேல்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்துச் சபை தொடுத்துள்ள இந்த வழக்கின் பிரதிவாதிகளாக முன்னாள்ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஜனாதிபதி வேட்பாளரான மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார வேலைகளுக்காக இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களைப் பாவித்த வகையில் சபைக்கு 14 கோடி (140 மில்லியன்) ரூபா நட்டம் ஏற்பட்டிருப்பதால் அத்தொகையை பிரதிவாதிகளிடமிருந்து பெற்றுத்தருமாறு கோரி இந்த வழக்கு கொழும்பு வர்த்தக நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது.