இலங்கையர்களின் மனிதாபிமான செயற்பாட்டை பாராட்டி சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் ஹம்பாந்தோட்டை பகுதியில் உள்ள ஏரிக்குள் சிக்குண்ட தாய் யானை மற்றும் அதன் குட்டியை கடும் போராட்டத்தின் மத்தியில் மீட்டனர். இதற்காக இரண்டு நாட்கள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் வன விலங்கு அதிகாரிகளின் மனிதாபிமானத்தை பாராட்டி குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏரியிலிருந்து யானைகளை காப்பாற்ற பிரத்தியேக பாதை ஒன்றை தோண்டி வனவிலங்கு அதிகாரிகள் முயற்சித்திருந்தனர். இதன்போது அந்த பாதையில் பயணித்த யானைகள் காட்டிற்குள் ஓடிச் சென்றன. இது தொடர்பான காணொளியையும் குறித்த ஊடகம் வெளியிட்டுள்ளது.
இதேவேளை, கடந்த பெப்ரவரி மாதம் தென்னிந்தியாவில் விவசாய பண்ணைக்குள் 30 அடி பள்ளத்தில் சிக்குண்ட ஆறு வயது பெண் யானை காப்பாற்றப்பட்டமை தொடர்பிலும் குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.