கேந்திர பொருளாதார, தொழில்நுட்ப, கலாசார, சமூக மற்றும் ஜனநாயக நிலையமாக யாழ்ப்பாணத்தை மாற்றும் வகையில் திட்டங்கள் வகுக்கப்படும்.
இவ்வாறு பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள நகரத்தின் கூறுகள், கலாசாரப் பெறுமானங்கள், இயற்கை வளங்கள், முலதன சொத்துக் குழுக்கள், ஜனநாயக மற்றும் அரசியல் கூறுகள், இந்த அபிவிருத்தித் திட்டத்தில் பரிசீலிக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் திடீர் வெள்ளப் பிரச்சினை, கழிவு முகாமைத்துவம், மற்றும் குடிதண்ணீர்ப் பிரச்சினைக ளுக்குத் தீர்வு காணப்படும்.
போர் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கில் பொருளாதாரச் செயற்பாடுகள் வளர்ச்சி அடைந்துள்ளன.
ரொரன்ரோ, சிட்னி, லண்டன், பாரிஸ், பேர்ளின் போன்ற நகரங்களுக்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இங்கு உள்ள தமது உறவினர்களுக்கு கணிசமான நிதியை அனுப்புகின்றனர். இதனால், மதுபாவனை, போதைப் பொருள் பயன்பாடு போன்றன அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாண மக்கள் சிலர் கூறுகின்றனர்.
நடுத்தர வருமானம் கொண்ட புதிய சமூகம் இப்போது யாழ்ப்பாணத்தில் எழுச்சி பெற்று வருகிறது. அவர்களின் கனவுகள், தேவைகள், ஆற்றல், படைப்பாற்றல், நோக்கம் ஆகியவற்றை நிறைவேற்றத் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படவேண்டும்.
யாழ்ப்பாணத்துக்கு, தரமான நகரத்துக்கான உட்கட்டமைப்பு முறை, பௌதிக மற்றும் தொழில்நுட்ப சொத்துக்கள், மூலம், அவர்களின் தேவைகள் வர்த்தகம், முதலீடுகள் போன்றவற்றை நிறைவேற்ற முடியும்.– என்றார்.