ட்ரம்ப் அதிபரான பிறகு, ஜெர்மனியுடன் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறார்.
குறிப்பாக, கடந்த மார்ச் மாதம் ட்ரம்ப், ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்கலன் இருவரும் சந்தித்தனர்.
அப்போது, ஏஞ்சலா, ட்ரம்புடன் கைக்குலுக்க வர, ட்ரம்ப் அதைக் கண்டுகொள்ளவில்லை.ஏஞ்சலாவின் முகத்தைக்கூட ட்ரம்ப் பார்க்கவில்லை. இதனால், பயங்கர நோஸ்கட்டுடன் ஏஞ்சலா திரும்பினார்.
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களுடன் ட்ரம்ப் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, ட்ரம்ப்பின் பேச்சால் ஜெர்மனி மேலும் சூடாகியுள்ளது.
முக்கியமாக, “ஜெர்மனியர்கள் கெட்டவர்கள்… மிகவும் கெட்டவர்கள். அமெரிக்காவில் அவர்கள், மில்லியன் கணக்கில் கார்களை விற்பனைசெய்துள்ளனர். ஆனால், அவற்றை நாங்கள் தடுத்து நிறுத்துவோம்” என்று கூறியுள்ளார்.
ட்ரம்ப்பின் இந்தக் கருத்தால், உலக அரங்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கம்போல, ட்ரம்ப்புக்கு எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.
ஒபாமா இருந்தவரை ஜெர்மனியுடன் அவர் நல்லுறவைக் கடைப்பிடித்து வந்தார்.
இதற்கிடையே, ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கை, இரு நாட்டின் உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.