பல்வேறு நாடுகளிலிருந்து கடல் வழி போக்குவரத்து மூலம் 60,000க்கும் மேற்பட்டோர் ஐரோப்பியாவின் கடற்கரைக்கு 2017ல் வந்தடைந்துள்ளார்கள் என அகதிகளுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜெனிவாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அகதிகளுக்கான சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2017ம் ஆண்டில் இதுவரையிலும் 60,521 அகதிகள் மற்றும் குடிபெயர்பவர்கள் கடல் வழியாக ஐரோப்பிய கடற்கரையை வந்தடைந்துள்ளார்கள்.
இது கடந்தாண்டை விட குறைவு என கூறப்பட்டுள்ளது.
இதில் 80 சதவீதம் பேர் இத்தாலியில் இறங்கியுள்ளார்கள். மற்றவர்கள் கிரீஸ் மற்றும் ஸ்பெயினில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய் கிழமையிலிருந்து வந்த 6000 பேர் இந்த கணக்கில் சேர்க்கப்படவில்லை.
மேலும் 2017ம் ஆண்டில் Mediterranean கடலில் 1530 பேர் இறந்துள்ளதாகவும், லிபியா மற்றும் சிசிலிக்கு இடையில் வரும் போதே அதிகம் பேர் மரணமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரியிலிருந்து மே மாதம் வரை 193,333 அகதிகள் கடல் மூலம் ஐரோப்பிய கடற்கரையை அடைந்தார்கள் என்பதும், அதில் 1398 பேர் நடுவழியில் உயிரிழந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.