சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த மூன்றரை வயது சிறுமிக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் நேத்ரா. மூன்றரை வயது சிறுமியான இவர் ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டியில் அபார திறமையுள்ளவராக திகழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியின் 4 வயதுக்கு உட்பட்டோருக்கான 500 மீ – 1000 மீ பிரிவில் நேத்ரா சமீபத்தில் கலந்து கொண்டார்.
இந்த போட்டியில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்திய நேத்ரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம் இந்தியாவில் இருந்து 4 வயதுக்கு உட்பட்டோருக்கான ஸ்கேட்டிங் போட்டியில் பங்கு பெற்ற முதல் சிறுமி என்ற பெயரையும் நேத்ரா பெற்றுள்ளார்.
ஏற்கனவே தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் மூன்றாவது இடம் பிடித்துள்ள நேத்ரா, தற்போது உலக அளவிலான போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.