மட்டக்களப்பு மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் வீசிவரும் கடும் காற்று காரணமாக கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவி பணிப்பாளர் எம்.ருக்ஷான் குரூஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக மாவட்டத்தின் மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பூநொச்சிமுனை, ஏத்துக்கால, புன்னக்குடா, நாவலடி, வாகரை உட்பட பல கரையோர பிரதேசங்களில் கடும் காற்று வீசி வருகின்றது.
கடல் கொந்தளிப்பு மற்றும் காற்று காரணமாக மீனவர்களை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாமென, கடற்றொழில் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக பிரதிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தாhர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்றொழிலில் 14000 குடும்பங்களும், வாவி மீன்பிடியில் 11000 குடும்பங்களும் ஈடுபட்டு வருகின்ற நிலையில், இம் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.